பிரான்சில் டிரம்பின் கார் முன்பு மேலாடையின்றி ஓடி வந்த இளம் பெண்கள்: வெளியான காரணம்

Report Print Santhan in பிரான்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்சில் இளம் பெண்கள் அவர் வந்த காரின் முன்பு மேலாடையின்றி ஓடி வந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முதலாம் உலகம் போர் 1918-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் திகதி முடிவடைந்ததையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் முதல் உலகப்போர் நூற்றாண்டு நிறைவு விழா அனுசரிக்கப்படுகிறது.

இந்த நூற்றாண்டு விழா பல்வேறு நாடுகளில் நடக்கிறது.

இந்நிலையில் இதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் உலகின் முக்கிய 70 நாடுகளில் இருக்கும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் சென்றிருந்தார். விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்ற போது, இரண்டு பெண்கள் மேலாடையின்றி அவர் காரின் முன்பு ஓடி வந்தனர்.

அந்த பெண்களில் உடல்களில் welcome war criminals என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது போர்குற்றவாளிகளே வருக என்று அர்த்தம்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு இருந்த பொலிசார் உடனடியாக அந்த இரண்டு பெண்களையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் FEMEN என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். அந்த அமைப்பு பிரான்சின் பெரிய பெண்ணுரிமை அமைப்பு ஆகும்.

பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்முறை, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை என்று பல விஷயங்களுக்கு எதிராக இந்த அமைப்பு போராடி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்