பிரான்ஸ் சென்றிருந்த மெலானியா டிரம்பை வரவேற்ற பிரிஜிட் மேக்ரான்: இருவரும் அணிந்திருந்த உடையின் மதிப்பு தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் சென்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பின் உடையும், அவரை வரவேற்க காத்திருந்த மேக்ரான் மனைவியின் உடை விலையும் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முதல் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் மனைவி மெலானியா டிரம்புடன் பிரான்ஸ் சென்றுள்ளார்.

இந்நிலையில் Elysee மாளிகையில் மெலானியா டிரம்பை வரவேற்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் மனைவி Brigitte Macron காத்திருந்தார்.

மெலானியா டிரம்ப் வந்திறங்கியவுடன், அவரின் கையை பிடித்து புன்னகையோடு Brigitte Macron(65) உள்ளே அழைத்துச் சென்றார். அப்போது மெலானியா டிரம்ப் கருப்பு நிற ஆடையும், Brigitte Macron கருநீல நிற ஆடையும் அணிந்திருந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் அணிந்திருந்த ஆடையின் மதிப்பு குறித்து பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், மெலானியா டிரம்ப் கருப்பு நிற கோட் அணிந்து, கம்பளியால் ஆன பெல்ட் அணிந்திருந்தார். காலில் Louboutin snakeskin வகை கொண்ட காலணியும் அணிந்திருந்தார்.

மெலானியா அணிந்திருந்த உடையின் மதிப்பு 4,000 பவுண்ட் வரும் எனவும் காலணியின் மதிப்பு 550 பவுண்ட் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளை மேக்ரானின் மனைவி Brigitte Macron அணிந்திருந்த கருநீல கோட்டின் மதிப்பு 1,590 பவுண்ட் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்