ஒவ்வொரு கல்லாக தேடிவிட்டோம்.. எவ்வித சடலங்களும் இல்லை: மார்செய் தீயணைப்பு படையினர்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் மார்செய் நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், இதற்கு மேல் சடலங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை மார்செய் நகரில் உள்ள இரண்டு கட்டிடங்கள் இடிந்து விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்ட நிலையில், 4ஆம் நாள் முடிவில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கடும் மழையிலும் தொடர்ச்சியாக இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் எவரேனும் உள்ளனரா என்று தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக நேற்றைய தினம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த தீயணைப்பு படையினர், வேறு உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என உறுதியாக தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து மீட்புப்படையின் துணை பொறுப்பு அதிகாரி Charles Henri Garie கூறுகையில்,

‘சற்று முன்னர் தான் மீட்புப்பணி முடிவுக்கு வந்தது. நாங்கள் ஒவ்வொரு கற்களாக தேடிவிட்டோம். மேலதிகமாக எவ்வித சடலங்களும் இல்லை’ என தெரிவித்தார்.

இந்த மீட்புப்பணியில் 60 தீயணைப்பு படையினர் ஈடுபட்டிருந்த நிலையில், இதுவரை 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் எட்டு பேரின் சடலங்களை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்