பாரிசில் அடுத்த 48 மணிநேரங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு!!

Report Print Kavitha in பிரான்ஸ்

பாரிசில் முதலாம் உலக மகா யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவு நிகழ்வுகள் முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் நூற்றாண்டு கால நினைவு நிகழ்வு பாரிசில் பல்வேறு பகுதிகளில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவில் 98 வெளிநாட்டு பிரதிநிதிகள், 72 ஜனாதிபதி/பிரதமர்கள் என பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலேனியா ட்ரம்ப் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

இதைதொடர்ந்து இன்று காலை முதல் பாரிசில் பல்வேறு வீதிகள் முடக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாரிசுக்குள் மொத்தம் 10,000 அதிகாரிகள் ஆயுதங்களுடன் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் எனவும், 300 மீட்புப்படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை முன்னதாக உள்துறை அமைச்சரும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்