பிரான்சில் கட்டிட இடிபாடுகளுக்குள் 10 பேர் மாயம்! மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Marseille நகரில் இரு கட்டிடங்கள் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 10 பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள Marseille நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் திங்கட்கிழமையன்று நடந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் 40 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட அவர்கள் காயமடைந்த இருவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, வேறு யாராவது இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்களா என தேடும் பணி நடைபெற்றது. பின்னர், இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் இருந்த மற்றொரு கட்டிடம் இடியும் நிலையில் இருந்ததால், பாதுகாப்பு கருதி தீயணைப்பு படையினர் அதனை இடித்து தரைமட்டமாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் பத்து பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் Marseille பகுதி பெரும் பதற்றத்தில் உள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் Christophe Castaner நம்பிக்கையுடன் காத்திருப்போம் என தெரிவித்துள்ளார். தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் தொடர்ச்சியாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்