புற்றுநோய்க்காக தலைமுடியை தானம் செய்த பிரான்ஸ் அமைச்சர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் சமத்துவத்துறை அமைச்சர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விக் செய்வதற்காக தனது தலைமுடியை தானம் செய்துள்ளதோடு, தானம் செய்யுமாறு மற்றவர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் சமத்துவத்துறை அமைச்சரான Marlène Schiappa, தனது முகநூலில் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில், ஏன் தனது தலை முடியை வெட்டிக் கொண்டுள்ளார் என்பதை பகிர்ந்து கொண்டுள்ளதோடு, தனது சகோதரியும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது தலைமுடியை தானம் செய்வது குறித்தும் தெரியப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே புற்றுநோய் உடையவர்களுக்கு மருத்துவச் செலவுகள் பெரும் பாரமாக இருக்க, அதில் விக் வாங்குவது கூடுதல் செலவாக இருக்கும் என்று Marlène தெரிவித்தார்.

புற்றுநோயாளி ஒரு பெண் என்றால் அவரது செலவீனம் மருத்துவச் செலவையும் தாண்டி அதிகரிக்கிறது என்று கூறும் Marlène கீமோதெரபி என்னும் புற்றுநோய் சிகிச்சையில் தங்கள் முடியை இழக்கும் பெண்கள் விக்குக்காகவும் செலவிட வேண்டியிருக்கிறது, பலருக்கு விக் வாங்க முடிவதில்லை என்றும் தெரிவித்தார்.

தான் செய்ததைக் குறித்து ஷேர் செய்வதற்கு முதலில் தயங்கியதாகவும், ஆனால் அதைப் பகிர்வதால் மற்றவர்களும் அதைப் பார்த்து தன்னைப் பின்பற்ற உதவியாக இருக்கும் என்பதாலேயே சமூக ஊடகத்தில் தன் தலை முடியை வெட்டிக் கொண்டதை பகிர்ந்து கொண்டதாகவும் Marlène தெரிவித்தார்.

அது மிகவும் எளிது, உங்கள் தலைமுடியில் குறைந்தது 25 சென்றிமீற்றர் அளவுக்கு மட்டும் வெட்டி அதை தபாலில் அனுப்பி விட வேண்டும் அவ்வளவுதான் என்கிறார் Marlène.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்