பிள்ளைகளுக்கு கோகோ கோலா கொடுத்த தந்தைக்கு சிறை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் ஒரு தந்தை பிள்ளைகளுக்கு முறையாக உணவளிக்காமல் வெறும் கோகோ கோலாவும் கேக்கும் மட்டுமே கொடுத்ததில் அவர்களது பற்கள் அழுகி விழுந்து விட்டதால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று மற்றும் நான்கு வயதுடைய அந்த சிறுவர்களின் தந்தை ஒரு குடிகாரர். எப்போதும் மனைவியையும் பிள்ளைகளையும் குடித்து விட்டு வந்து முரட்டுத்தனமாக அடிப்பது அவரது வழக்கம்.

அவர் 2016ஆம் ஆண்டிலிருந்து 2018 வரை, ஒரு தந்தையாக தனது கடமையை ஆற்றத் தவறிவிட்டதாக கூறியுள்ள Limoges குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அந்த சிறுவர்களில் பெரியவனுக்கு ஏழு பற்கள் அழுகி விட்டன. சிறியவனுக்கு பேச்சு வரவில்லை.

அரசு காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுவர்கள் இருவருக்கும் நல்ல உணவு கொடுக்கப்பட்டு வருகிறது.

சுத்தமாக படிப்பறிவே இல்லாத அந்த தந்தை, குடும்பச் சூழலையே உணராமல், தனது பணம் முழுவதையும் மது பானம் வாங்குவதிலேயே செலவிட்டுள்ளார்.

அவர்கள் வீட்டில் சாப்பிட கோகோ கோலாவைத்தவிர எதுவும் இல்லை. பிரிட்ஜோ, கட்டிலோ, பெட் ஷீட்களோ, ஏன் பிள்ளைகள் விளையாட பொம்மைகள் கூட இல்லை.

அவ்வப்போது அவர்களுக்கு கோகோ கோலாவும் கேக்கும் மட்டுமே சாப்பிடக் கொடுத்திருக்கிறார் அந்த தந்தை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்