கதவை உடைத்துக்கொண்டு நுழைந்த பொலிஸ்! பயந்து தற்கொலை செய்துகொண்ட நபர்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Villemomble பகுதியில் பொலிசார் வீட்டிற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Villemomble பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு குற்றவாளி ஒருவரை கைது செய்ய பொலிசார் சென்றுள்ளனர். பின்னர், அதிரடியாக குற்றவாளி வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குற்றவாளி, வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்துள்ளார். இதனால் தரையில் விழுந்த அவருக்கு பலத்த அடிபட்டது.

அதனைத் தொடர்ந்து, படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்நபர், உடலில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

குறித்த நபர் 46 வயதுடையவர் என்பதும், அவர் பண கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்