நபரொருவரை மோசமாக தாக்கி தீ வைத்த ஐவர்: பாரிஸில் நடந்த கொடூரம்

Report Print Kavitha in பிரான்ஸ்

பாரிசில் Stalingrad (19 ஆம் வட்டாரம்) இல் நபர் ஒருவரை ஐந்து நபர்கள் சேர்ந்து தாக்கி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை குறித்த நபர் மோசமாக தாக்கியதோடு, அவர் மீது பெற்றோல் ஊற்றியுள்ளனர். பின்னர் அவரை தீமூட்டியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரின் ஆடைகள் தீப்பற்றி எரிந்ததாகவும், மேம்பாலத்தில் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து, Canal de la Villette ஆற்றுக்குள் பாய்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்தனர்.

தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

20 நிமிடங்களுக்கு மேலாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, குறித்த நபர் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர், Pitié-Salpetrière மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தாக்குதலாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்