பீலபெல்ட் நகரில் சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் 10வது ஆண்டு நிறைவு விழா

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்

பீலபெல்ட் நகரில் சிறப்பாக இயங்கும் நடனப் பள்ளியான சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் அதிபர், கலைமாமணி திருமதி.பிரீடா பிரபாகரன் அவர்களின் தன்னலமற்ற நடனச் சேவையைப் பாராட்டி பட்டமளிக்கப்பட்டுள்ளது.

Oriental Examination Board London ஒன்று கூடி திருமதி.பிரீடா பிரபாகரனுக்கு "நாட்டியக் கலாபூசணம்" பட்டமளித்துள்ளது.

இதன்போது Oriental Examination Board Londonஇன் தலைவர் கானபூஷணம் ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் நாட்டிய கலாபூசணம் என்ற கௌரவப் பட்டம் வழங்கியிருந்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்