தெற்கு பிரான்ஸை சூறையாடிய வெள்ளம்

Report Print Kavitha in பிரான்ஸ்

கடந்த மூன்று நாட்களாக பிரான்சின் தெற்கு பிராந்தியங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

நேற்று தெற்கில் ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Var மாவட்டத்தின் Saint-Maxime மற்றும் Roquebrune ஆகிய இரு நகரங்களுக்கு இடைப்பட்ட கடல் பிராந்தியங்களில் வெள்ளம் கடலுக்குள் சென்றதில், பல மகிழுந்துகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று மகிழுந்து சாரதி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இவரை தேடும் பணியில் 100 தீயணைப்பு படையினர் வரை களத்தில் போராடி வருகின்றனர்.

இது குறித்து அந்நகர முதல்வர் "வெள்ளத்தில் உங்கள் மகிழுந்தை காப்பாற்றும் நோக்கில் உங்கள் உயிரை பலியிட்டு விடாதீர்கள்" என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் குறித்த பிராந்தியத்தில் ஒரு இரவில் மாத்திரம் 210 மீட்டர்கள் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers