பாரீஸில் கூண்டில் அடைக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை: சுவாரஸ்ய பின்னணி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஐரோப்பிய பண்ணைகளில் விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்ட சம்பவம் பாரீஸில் நடந்தேறியது.

நேற்று பாரீஸில் நடைபெற்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் நடத்திய போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பே வாட்ச் என்னும் சீரியல் மூலம் பிரபலமான கவர்ச்சி நடிகையான பமீலா ஆண்டர்சன் போராட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களுடன் இணைந்து தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்டார்.

விலங்குகளை கூண்டில் அடைக்கும் செயலுக்கு ஒரு முடிவு கட்டுவதற்கு ஆதரவாக ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ஒரு மில்லியன் கையெழுத்துக்களை பெறும் நோக்கில், பிரபல விலங்குகள் நல அமைப்பு ஒன்று நடத்தும் போராட்டங்களுக்கு பமீலா ஆதரவு அளித்துள்ளார்.

மனிதர்களை மகிழ்விப்பதற்காகவோ, நமக்கு உணவையோ உடையையோ தருவதற்காகவோ எந்த ஒரு விலங்கும் கூண்டில் அடைக்கப்படக் கூடாது என தான் எண்ணுவதாக பமீலா தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்குள் இந்த பிரச்சாரத்தை முன்வைக்கும் கூட்டத்தார், ஒரு மில்லியன் கையெழுத்துக்களைப் பெற்று விட்டால், அது தொடர்பாக ஐரோப்பிய கமிஷன் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers