நாஸிக்களை வேட்டையாடிய தம்பதிக்கு பிரான்ஸ் கௌரவம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பல நாஸிக்களை நீதிக்கு முன் கொண்டு நிறுத்திய ஒரு தம்பதிக்கு பிரான்ஸ் உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.

பிரான்சின் மிகப்பிரபலமான நாஸி வேட்டையர்களான Serge Klarsfeld மற்றும் ஜேர்மானியரான அவரது மனைவி Beate ஆகிய இருவருக்கும் நேற்று முன்தினம் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தலைமையில் நடந்த ஒரு விழாவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Serge Klarsfeld (83)க்கு Legion of Honour என்னும் பிரான்சின் உச்ச விருதும் அவரது மனைவியான Beate Klarsfeld (79)க்கு National Order of Merit என்னும் விருதும் வழங்கப்பட்டன.

Beate Klarsfeld, 2014ஆம் ஆண்டே Legion of Honour விருதைப் பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

1935ஆம் ஆண்டு ரொமேனியாவில் பிறந்த இனப்படுகொலைக்குத் தப்பி பிரான்ஸ் வந்துவிட்டாலும் அவரது தந்தை, கொல்லப்படுவதற்காக சித்திரவதை முகாமுக்கு இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ணால் கண்டார் Serge Klarsfeld.

பிரான்சில் தான் சந்தித்த Beate Kuenzelஐ மணந்தபின் இருவரும் இணைந்து நாஸிக்களை நீதிக்குமுன் நிறுத்த முடிவு செய்ததோடு, தொடர்ந்து 50 ஆண்டுகளாக தங்கள் பணியை செவ்வனே செய்தனர்.

பல நாடுகளுக்கு தப்பி மறைந்து வாழ்ந்த இனப்படுகொலைக்கு காரணமான முக்கிய நபர்கள் பலரை அவர்கள் நீதியின் முன் கொண்டு நிறுத்தினர்.

அவர்களது பணிக்கு முன்னாள் ஜனாதிபதி Francois Mitterrand மூலமாகவே எதிர்ப்புகள் ஏற்பட்டபோதும் கொஞ்சமும் தொய்வில்லாமல் தங்கள் பணியை தொடர்ந்தனர்.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் தலைமையில் பிரான்ஸ் அவர்களை கௌரவிக்க முடிவு செய்து நாட்டின் உயரிய விருதுகளை அளித்து அவர்களை கௌரவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers