பிரான்சின் பிரபல கட்சித்தலைவரின் மகள் மீது தாக்குதல்: அரசியல் உள்நோக்கம் கொண்டதா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் பிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் மகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் அது அரசியல் உள் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என அவர் கருதுகிறார்.

பிரான்சின் National Rally என்னும் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான Marine Le Penஇன் மகள்களில் ஒருவர் மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

Nanterre பகுதியில் தனது உறவினர் ஒருவருடன் நின்று கொண்டிருக்கும்போது இரண்டு நபர்கள் அந்த இளம்பெண்ணை அணுகி அவள் குளிரால் அவதியுறுவதுபோல் தெரிவதாகக் கூறி அவளது உடல் பாகங்களைத் தொட்டுத் தேய்க்கத் தொடங்கினர்.

அவளுடன் நின்ற அவளது உறவினர் அதைத் தட்டிக் கேட்டபோது, அவரை அந்த இளைஞர்கள் அடித்து உதைத்ததோடு Marine Le Penஇன் மகளையும் தாக்கினர்.

தொடர்ந்து அவளது முகத்தில் குத்தப்பட்டதால் அவரது மூக்கு உடைந்ததோடு அவரது உறவினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, Marine Le Penஇன் மகளுக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும்போது குடிபோதையில் இருந்த அந்த இருவரும், பின்னர் தாங்கள் தாக்குதல் நடத்தவேயில்லை என்று மறுத்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு, தாங்கள் தாக்கிய பெண் Marine Le Penஇன் மகள் என்பது முன்பே தெரியுமா என்பது உறுதி செய்யப்படாத நிலையில், இந்த தாக்குதல் அரசியல் பின்னணி கொண்டதா என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் இது அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று Marine Le Pen கருதுகிறார்.

ஏனென்றால், ஐரோப்பாவில் உள்ள வலது சாரிக் கட்சிகளை உத்வேகப்படுத்தும் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்னும் திட்டம் தன்னிடம் இருப்பதாக அமெரிக்கரான Steve Bannon அறிவித்தபோது அதற்கு Marine Le Pen கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ரோமில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில், ஒரு அமெரிக்கர் அல்ல, நாங்கள், ஐரோப்பியர்களான நாங்கள் மட்டுமே ஐரோப்பாவை மீட்பதற்கான ஒரு அமைப்பை உருவமைக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.

எனவேதான் தனது மகள் தாக்கப்பட்டதின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கும் என Marine Le Pen கருதுகிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers