பிரான்சில் அரை நிர்வாணமாக கைது செய்யப்பட்ட கொள்ளையன்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Capbreton நகரில், தப்பித்து ஓடிய கொள்ளையன் அரை நிர்வாண நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

Capbreton நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வேளையில், வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இரண்டு கொள்ளையர்களை கைது செய்தனர். அவர்களில் ஒருவன் பொலிசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளான்.

அதன் பின்னர் குறித்த கொள்ளையனை பிடிக்க களம் இறங்கிய பொலிசார் குழு ஒன்று, சில நிமிடங்களில் அவனை கைது செய்துள்ளனர்.

அப்போது அவன் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்ததாகவும், பொலிசாரிடம் இருந்து தப்பிக்க நடைபயிற்சி மேற்கொள்பவனைப் போல் இருக்கவே அரை நிர்வாணத்தில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் அனைத்தையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்