பாரீஸில் கார் பார்க்கிங் என்று நினைத்து கார் ஓட்டுநர் செய்த செயல்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயிலை கார் பார்க்கிங் என்று நினைத்து கார் ஓட்டுநர் ஒருவர் காருடன் ரயில் நிலைய படிக்கட்டுகளில் சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

Galeries La Fayetteக்கு எதிரே கார் ஓட்டுநர் ஒருவர் அண்டர்கிரவுண்ட் கார் பார்க்கிங் என்று நினைத்து காருடன் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழைந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கவனக்குறைவான அந்த ஓட்டுநர் ’மெட்ரோ’ என வைக்கப்பட்டிருந்த பெரிய போர்டைக் கூட கவனிக்காமல் படிக்கட்டுகளில் வேகமாக காரை செலுத்தினார்.

நடந்ததை அவர் உணர்வதற்குள், ரிவர்ஸ் எடுக்க முடியாத அளவிற்கு கார் சிக்கிக் கொண்டது.

இதனால் ரயில் நிலைய நுழைவாயில் வழியாக யாரும் நுழையமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் அந்த கார் அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers