பிரான்சில் வீட்டில் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் பெண் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Noisy-le-Sec பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டில் நேற்று பிற்பகல் பெண் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அங்கு விரைந்துள்ளனர். அப்போது அந்த வீட்டின் சமயலறையில் அந்த பெண்ணை தாக்கிய நபர் இருந்துள்ளார்.

கையில் கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு, மிரட்டியுள்ளார். பொலிசார் அந்த நேரத்தில் கத்தியை கீழே போட்டுவிட்டு சரணடைந்துவிடும் படி கூறியுள்ளனர்.

ஆனால் அந்த நபர் பொலிசாரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் பொலிசார் வேறு வழி இல்லாமல் இரண்டு தடவைகள் தாக்குதலாளியை நோக்கி துப்பாக்கியை முழக்கினர். பின்னர் காயமடைந்த அந்த நபர் மற்றும் ஏற்கனவே காயமடைந்திருந்த பெண் என இருவரையும் பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்