லொறிகளைக் குறிவைக்கும் அகதிகள்: வெளியான வீடியோ குறித்த பின்னணி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அதிகமாக அகதிகள் குறிவைக்கும் Calais பகுதியில் பொலிசாரின் கெடுபிடி அதிகமாகிவிட்டதால் அகதிகள் சிறு கிராமங்கள் வழியாக செல்லும் லொறிகளைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர்.

வட பிரான்சின் சிறு நகரங்கள் வழியாக பிரித்தானியா நோக்கி செல்லும் லொறிகளின் பின்னால் ஓடும் ஆப்பிரிக்க அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Calaisஇலிருந்து 200 மைல் தொலைவில் உள்ள Ouistreham துறைமுகப்பகுதியில் ஆப்பிரிக்க அகதிகள் பிரித்தானியாவுக்கு செல்லும் நோக்கில் லொறிகளைப் பின் தொடர்ந்து ஓடுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அவர்களைப் பேட்டி கண்டபோது, அவர்களில் பெரும்பாலானோர் சூடானைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ஒரு வீடியோவில் ஒரு வளைவில் லொறி ஒன்று செல்லும்போது அதைப் பின்தொடர்ந்து ஓடும் அகதிகள் அதன் கதவைத் திறந்து உள்ளே நுழைய முயல்கின்றனர், ஆனால் லொறி மிகவும் வேகமாக செல்வதால் அவர்களது முயற்சி தோல்வியடைகிறது.

இன்னொரு வீடியோவில் பத்து அகதிகள் ஒரு சிவப்பு லொறியின் பின் கதவைத் திறந்து அதில் ஏற முயற்சிக்கின்றனர், எட்டு பேர் ஏறி விட, இரண்டு பேரால் மட்டும் ஏற முடியவில்லை. இத்தனையும் லொறி ஓட்டுனருக்குத் தெரியாமலே நடக்கிறது.

இந்த பகுதிகளில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் லொறிகள் மிகவும் மெதுவாக செல்ல வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகின்றன, இது அகதிகளுக்கு வசதியாகி விடுகின்றது.

எப்படியாவது பிரித்தானியாவுக்கு சென்று விட வேண்டும் என்பதற்காக துறைமுகங்கள் அருகில் காத்திருக்கும் இந்த அகதிகளில் சிலரை சமீபத்தில் பிரான்ஸ் பொலிசார் அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்