இரட்டை வேடம் போடுகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி! பதிலடி கொடுத்த மேக்ரான்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஐரோப்பாவின் இரண்டு புலம்பெயர்தல் எதிர்ப்பு அரசியல்வாதிகளான ஹங்கேரியின் பிரதமர் Viktor Orbanம் இத்தாலிய உள்துறை அமைச்சரான Matteo Salviniம் சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை கடுமையாக விமர்சித்ததோடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் குடியேற முயலும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக இணைந்து கடும் முயற்சிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஐரோப்பாவில் இரண்டு கூட்டங்கள் உள்ளன, அவற்றில் ஒன்றின் தலைவராக மேக்ரான் செயல்படுகிறார் என்று கூறியுள்ள Viktor Orban, அவர் புலம்பெயர்தலுக்கு ஆதரவு தரும் அரசியல் சக்திகளின் தலைவராக இருக்கிறார்.

அதே நேரத்தில், நாம் சட்ட விரோத புலம்பெயர்தலை தடுக்கவும் விரும்புகிறோம் என்றும் நக்கலாக கூறியுள்ளார்.

Matteo Salviniயோ இமானுவல் மேக்ரான் இரட்டை வேடம் போடுவதாகவும் ஐரோப்பிய ஒற்றுமை குறித்து பேசும் அவர் உதவி கோரும் ரோமின் கோரிக்கைகளை அசட்டை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்விரு தலைவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது ‘என்னை அவர்கள் தங்களது முக்கிய விரோதியாக பார்க்க விரும்பினால், அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று கூறிய இமானுவல் மேக்ரான், புலம்பெயர்தலை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்கும் இடையே ஒரு கடுமையான எதிர்ப்பு உருவாகி வருவதாகவும் ஆனாலும் வெறுப்பு பேச்சை ஆதரிப்பவர்களுக்கு இணங்கப் போவதில்லை என்றும் காரசாரமாக தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்தலுக்கு ஆதரவளிக்க மறுக்கும் நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ள மேக்ரான், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நன்மையைப் பெறுபவர்கள் புலம்பெயர்தல் பிரச்சினை என்று வந்துவிட்டால் மட்டும் தேச நலன் குறித்து பேச ஆரம்பித்து விடுவார்கள், இவர்கள் மீது தடைகள் விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்