தாயிடம் தவறாக நடக்க முயன்ற நபர்! பிரான்சில் 10 வயது சிறுவன் செய்த துணிகர செயல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அம்மாவை காப்பாற்றுவதற்காக மாமனாரை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Champs-sur-Marne பகுதியின் Seine-et-Marne-ல் அமைந்திருக்கும் வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு பத்து வயதுடைய சிறுவனின் தாயாரிடம், அவரது மாமனார் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுவன் மாமனாரை தடுக்க முற்பட்ட போது, அவர் சிறுவனை தள்ளிவிட்டுள்ளார்.

உடனடியாக சிறுவன், தனது தாயை காப்பாற்றும் நோக்கில், சமையலறைக்குள் சென்று அங்கிருந்த கூரான கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து மாமனாரின் கழுத்தில் குத்தியுள்ளான்.

அதன் பின் இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாணை மேற்கொண்டு மாமனாரை கைது செய்துள்ளனர்.

காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள சிறுவனின் மாமனார் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்