பிரான்சில் பயங்கர தீ விபத்து: உயிருக்கு போராடும் 5 குழந்தைகள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏழு பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன, அவர்களில் 5 குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இதுபோக 10 பொலிசார் உட்பட 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை உள்ளூர் நேரப்படி மாலை ஏழு மணியளவில் பாரீஸ் அருகே உள்ள Aubervilliers பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்தில் ஏற்பட்டது.

தீயை கட்டுக்குள் கொண்டு வர 100 தீயணைப்பு வீரர்கள் போராட வேண்டியிருந்தது.

பலர் ஜன்னல்கள் வழியாக வெளியேறி தப்பியதாகவும் சிலர் கூரை மீது அடைக்கலம் புகுந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் Gérard Collomb, விரைந்து செயல்பட்ட தீயணைப்புத்துறையினர் உட்பட அவசர உதவிக் குழுக்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அவர் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்