பிரான்சில் மகன் கண் முன்னே இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் தாய் ஒருவர் தன்னுடைய 11 வயது மகனின் கண் முன்னால் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Hauts-de-Seine பகுதியில் உள்ள Bourg-la-Reine இரயில் நிலையத்திற்கு கடந்த 17-ஆம் திகதி 40 வயதுடைய பெண் ஒருவர், தன் 11 வயதுடைய மகனுடன் RER B என்றழைக்கப்படும் இரயிலில் பிற்பகல் நேரத்தில் வந்து இறங்கினார்.

இதையடுத்து அவர்கள் வந்து இறங்கிய இரயில் புறப்பட தயாராக இருந்த போது, தீடீரென்று அந்த பெண் இரயில் முன் பாய்ந்தார்.

இதில் அந்த பெண் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினார். குறித்த சம்பவத்தைக் கண்ட மகன் தன் கண் எதிரே தாய் தற்கொலை செய்து கொண்டதால், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளான்.

அதன் பின் அந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு, மனநல சிகிச்சைக்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். இந்த சம்பவம் காரணமாக அங்கு சில நிமிடங்கள் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்