பிரான்சில் வெள்ளம் புயல் காரணமாக இத்தனை இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா? பட்டியலை வெளியிட்ட அரசு

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்றவைகள் காரணமாக 865 இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரான்சில் கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களை அரசு பட்டியலிட்டுள்ளது.

மழை, வெள்ளம், புயல் மற்றும் மண் சரிவு போன்ற இயற்கை சீற்றங்களை சந்தித்த நகரங்கள் மற்றும் கிராமங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

முதலில் இந்த பட்டியலில் 1,766 இடங்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால் அவற்றில் இருந்து 865 பகுதிகள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Nord

Pas-de-Calais

Finistere

Charente-Maritime

Charente

Cher

Dordogne

Gironde

Landes

Haute-Garonne

Ariège

Aude

Alpes-de-Haute- Provence

Bas-Rhin

Haut-Rhin

Côte d'Armor

Oise

ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு பிராந்தியங்கள் இந்த பட்டியல் கொண்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர், மற்றும் இல்-து-பிரான்சின் பல்வேறு நகரங்களும் இதில் உள்ளடங்கியுள்ளன.

இந்த நகரங்களுக்கான இழப்பீட்டுத் தொகை விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்