மாற்றுத்திறனாளியை அவமதித்த பிரான்ஸ் நீதிமன்றம்: வழக்கு விவரம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் ரயில்களில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கூறி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Toulouse பகுதியிலிருந்து பாரீசுக்கு தினமும் ஏழு மணி நேரம் பயணிக்கும் பிரெஞ்சு சட்டக்கல்லூரி மாணவரான Kévin Fermine, தனது நீண்ட பயணத்தின்போது கழிவறைக்கோ உணவு விற்கப்படும் இடத்திற்கோ செல்ல இயலாமல் தவிக்கிறார்.

சக்கர நாற்காலியில் பயணிக்கும் தன்னையும் தன் போன்ற பிற மாற்றுத்திறனாளிகளையும் ரயில்வே நிர்வாகம் பாரபட்சமாக நடத்துவதாகக் கூறும் அவர் இந்த பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.

கழிவறைக்கு செல்ல இயலாததால் தான் உடையிலேயே சிறுநீர் கழிக்க நேரிட்டதாகவும் அவமானத்தால் குறுகிப்போனதாகவும் தெரிவிக்கிறார்.

Kévinஇன் வழக்கறிஞர் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விதிகளை ரயில்வே நிர்வாகம் மீறி விட்டதாகக் கூறி 20,000 யூரோக்கள் நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.

ஆனால் ரயில்வே நிர்வாகம் 2024 வரை இவ்விதிகளுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்து விட்டது.

2015ஆம் ஆண்டின் சட்டத்தின்படி ரயில்வே நிர்வாகம் படிப்படியாக மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் வசதிகளை அணுகும் வகையில் மாற்றங்களை செய்தால் போதும்.

ஆகவே அந்த சட்டத்தின்படி வாதிட்ட ரயில்வேயின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், Kévinஇன் வழக்கை தள்ளுபடி செய்ததோடு வழக்கு தொடர்பாக ரயில்வேக்கு ஏற்பட்ட செலவையும் Kévin வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கட்டிடங்கள் மற்றும் பொது போக்குவரத்து அமைப்புகளில் சக்கர நாற்காலிகளில் வருவோர் அணுகுவதற்கு உதவும் வகையில் மாற்றங்களை செய்வதற்கான கால அளவை ஒன்பது ஆண்டுகளாக முடிவு செய்துள்ள நிலையில், இந்த தீர்ப்பும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...