பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த வருடம் மட்டும் எத்தனை பிக்பாக்கெட் திருடர்கள் சிக்கியுள்ளார்கள் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் போக்குவரத்துகளில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து 1500 பிக்பாக்கெட் திருடங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் போக்குவரத்துகளில் கொள்ளையர்கள் திருட்டுச் செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பொலிசாருக்கு வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து பொலிசார் நடத்திய தீவிர வேட்டையில் பொது போக்குவரத்து சேவைகளில் மட்டும் 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கொள்ளையர்களின் குறித்து பொலிசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதிலும் குறிப்பாக கோடை கால விடுமுறையில், நிரம்பி வழியும் இரயில் நிலைய சுரங்களில் இவர்கள் இலகுவாக பல உடமைகளை திருடிச் சென்றுவிடுகிறார்கள்.

தொலைபேசிகள், பண பைகள் உள்ளிட்ட பல பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் இரயில் நிலையங்கள், சுரங்கங்கள் மற்றும் இரயில்களில் மக்களோடு மக்களாக பொலிசார் பயணித்தனர்.

இதனால் திருடர்களை எளிதில் அடையாளம் காண முடிந்தது. அவர்கள பல்வேறு வடிவங்களில் நடமாடினர். அதன் பின் அவர்களை கைது செய்தோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டில் மொத்தமாக 2,130 பிக் பாக்கெட் திருடர்களை பொலிசார் கைது செய்திருந்தனர். அதேவேளை, இந்த ஆண்டு பாரிசில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களிலும் பொலிசார் சாதாரண உடைகளில் திருடர்களை கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்