சுற்றுலாப்பயணிகளை முகம் சுழிக்க வைத்த பாரீஸ்: கேலி செய்யும் பெண்ணியவாதிகள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கும் வகையில் பாரீஸ் நகராட்சி பசுமை கழிப்பிடங்களை அமைத்துள்ளது.

ஆனால் அவை சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடங்களில், அதுவும் படகுகள் அதிகம் செல்லும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளதால் மக்களை முகம் சுழிக்க செய்துள்ளன.

அத்துடன் அவை கொஞ்சமும் “பிரைவஸி” இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது மக்களை அசௌகரியமாக உணரச் செய்துள்ளது.

இதில் பலர் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் இவை வைக்கப்பட்டுள்ளதால் எரிச்சலடைந்துள்ளனர்.

அதை விட பெரிய பிரச்சினை என்னவென்றால் இந்த விடயத்தால் ட்விட்டரில் பெரிய வாக்குவாதமே ஏற்பட்டுள்ளது.

ஒருவர், ஆண்களுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதே, அப்போது பெண்கள் என்ன செய்வதாம் என்று கேள்வி எழுப்ப, பெண்ணியவாதி ஒருவர், ஆண்களால் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது, அதனால்தான் அவர்களுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று நக்கலடித்துள்ளார்.

AFP
AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்