ஓரினச்சேர்க்கை! பிரான்ஸ் நண்பரை எரித்துக் கொன்றது ஏன்? தமிழக இளைஞரின் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டு நண்பரை எரித்துக் கொன்றது ஏன் என்பது தொடர்பில் கைதான தமிழக இளைஞர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணியான பியாரே பெர்னாண்டோ ரெனேவுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் கடந்த ஐந்து வருடமாக இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிக்கடி பிரான்ஸிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து திருமுருகனைச் சந்தித்து வந்துள்ளார்.

இந்த நட்பு பின்னர் இருவரும் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் அளவுக்கு வளர்ந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 31-ம் திகதி பியாரே ரெனே சுற்றுலாவாகச் சென்னை வந்துள்ளார். 3-ம் திகதி வரை சென்னையில் தங்கி இருந்த அவர், பின்னர் திருச்சி சென்றுள்ளார்.

திருச்சியில் தங்கி இருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அவர், 5-ம் திகதி திருமுருகனை தொடர்புகொண்டுள்ளார்.

இதையடுத்து, திருச்சி சென்று அவரை அழைத்துக்கொண்டு மதுக்கூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார் திருமுருகன். அங்கு வைத்து இருவரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டபோது ரெனே திடீரென வலிப்பு ஏற்பட்டு பேச்சு மூச்சின்றி நினைவிழந்து மயங்கிவிழுந்துள்ளார்.

அவரை எழுப்ப முயற்சித்தும் பலனில்லாமல் போனது. இதனிடையே அவர் இறந்ததாக தெரியவந்தது. இதனால் அவருடைய சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்ததாக கூறும் திருமுருகன்,

வீட்டின் சமையலறையில் வைத்து டீசல், பெட்ரோல் டயர் ஆகியவற்றைக்கொண்டு பியாரே ரெனே உடலை எரித்ததாக தெரிவித்துள்ளார்.

எரிந்து முடிந்ததும் எலும்பு, சாம்பல் மற்றும் எரியாமல் கிடந்த சதைப்பகுதியை 3 சாக்குகளில் அடைத்து மூட்டையாகக் கட்டி உக்கடை வாய்க்காலிலும் பையை ஓலையக்குன்னம் கிராமத்தில் உள்ள ஒரு வயலிலும் வீசியதாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் திருமுருகனிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாகக் கூறியுள்ள பொலிசார், பிரான்ஸிலிருந்து பெர்னாண்டோ ரெனேவின் உறவினர்கள் யாராவது தொடர்புகொண்டார்களா என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்