பிரான்சில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை! எப்போது அமலுக்கு வருகிறது தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட இணையவசதியுடன் கூடிய சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது.

தற்போது உள்ள காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பல்வேறு தரப்பினர் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாக உள்ளனர்.

இதன் காரணமாக பிரான்சில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடைவிதிக்கப்படவுள்ளது.

பிரான்சில் ஏற்கனவே ஆசிரியர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது மாணவர்களுக்கும் இந்த தடை உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை காக்கும் நடவடிக்கை எனவும் இதுபோன்ற நடவடிக்கைகள் பாடத்திட்டத்தின் அடிப்படை என்றும் கூறியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்