இன்று முதல் பிரான்சில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இன்று ஆகஸ்டு மாதம் பிறந்துள்ள நிலையில் இன்று முதல் பிரான்சில் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

தண்ணீர் கட்டுப்பாடுகள்

பிரான்ஸ் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் வறட்சி அபாயம் இருப்பதால் பிரான்சின் பல துறைகள் தண்ணீர் பயன்பாட்டின் அளவைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளன. இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்டு மாதம் முழுவதும் அமுலில் இருக்கும்.

அல்சீமருக்கான மருந்து

Aricept, Ebixa, Exelon, Reminyl ஆகிய நான்கு அல்சீமருக்கான மருந்துகளுக்கான தொகை இனி மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களால் திருப்பி அளிக்கப்படாது.

முன்பு இம்மருந்துகளின் விலையில் 15 சதவிகிதம் வரை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களால் திருப்பி அளிக்கப்பட்டு வந்தது.

எரிவாயு விலை

இன்று முதல் எரி வாயு விலை சற்று உயர இருக்கிறது. சமையலுக்கு எரிவாயுவை பயன்படுத்துபவர்களுக்கு சராசரியாக 0.2 சதவிகிதமும் சமையலுக்கும் தண்ணீர் கொதிக்க வைப்பதற்கும் பயன்படுத்துபவர்களுக்கு 0.1 சதவிகிதமும் அதிகரிக்க உள்ளது.

சமையல், தண்ணீர் கொதிக்க வைக்க மற்றும் வெப்பமுண்டாக்குவதற்காக எரிவாயுவைப் பயன்படுத்துபவர்களுக்கு 0.2 சதவிகிதம் விலை உயர்வு இருக்கும்.

மின் கட்டணம்

வீடுகளுக்கான மின் கட்டணம் 0.5 சதவிகிதம் குறைய உள்ளது. ஆனாலும் சிறு தொழில்களுக்கான மின் கட்டணம் 1.1 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது.

குழந்தை பராமரிப்பு

குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்படுவர்களின் குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு 9.98 யூரோக்களிலிருந்து 10.21 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு வந்து நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும் நர்ஸ்களின் ஊதியம்

ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் வீடுகளுக்கு வந்து நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும் நர்ஸ்களின் ஊதியம் 8 யூரோக்களிலிருந்து 8.50 யூரோக்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

முடிவுக்கு வரும் கோடைக்கால விற்பனை

Pyrénées-Orientales மற்றும் Alpes-Maritimes ஆகிய இரு இடங்கள் தவிர மற்ற இடங்களில் ஆகஸ்டு 7 ஆம் திகதியுடன் கோடைக்கால விற்பனை முடிவுக்கு வருகிறது.

இவ்விரண்டு இடங்களில் மட்டும் ஆகஸ்டு 14 வரையும் Corsicaவில் ஆகஸ்டு 21 வரையும் கோடைக்கால விற்பனை தொடரும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்