குடியேறிகளை வைத்து உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ்: விமர்சனங்களால் வேதனையடைந்த வீரர்கள்

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்
1589Shares
1589Shares
ibctamil.com

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை காலபந்து தொடரை வென்று தன் நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது பிரான்ஸ் அணி.

இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற காரணத்தால், நாங்கள் மிகவும் திறமையான அணி என நிரூபித்துள்ளார்கள் பிரான்ஸ் வீரர்கள்.

ஆனால், பிரான்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் அந்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை. பல முக்கிய வீரர்கள் பிரான்ஸில் குடியேறியவர்கள், பல நாட்டைச் சேர்ந்தவர்களை அணியில் வைத்துக்கொண்டு பிரான்ஸ் என்ற பெயர் வைத்த அணி உலகக்கோப்பையை வென்றுள்ளது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் அந்நாட்டை தாய் நாடாக கொண்டவர்கள் இல்லை. பலரும் பிரான்ஸில் குடியேறியவர்கள்தான்.

பல்லாண்டு காலமாக அந்தந்த நாடுகளில் வசிக்கும் அவர்கள் கால்பந்து போட்டியை தங்கள் உயிராக மதிக்கிறார்கள்.

பிரான்ஸின் மாப்பே, போக்பா, கிரைஸ்மேன் ஆகியோர் முறையே பப்புவா நியூகினியா, ஜெர்மனி, கேமரூன் நாடுகளில் இருந்து வந்து பிரான்ஸில் குடியேறியவர்கள் . பிரஞ்சு குடியுரிமை பெற்று காலம்காலமாக வசித்து வருகின்றனர்.

எனவே கால்பந்து வெற்றிக் குறித்து அவர்கள் மீதான இந்த விமர்சனங்கள் வீரர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் அணியில் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் குடியேறியவர்கள் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமர்சனங்கள் குறித்து பதிலளித்த கிரைஸ்மேன் நாங்கள் எல்லோரும் ஒரே சீருடை அணிந்து விளையாடுகிறோம், எங்கள் நாடு பிரான்ஸ் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்