பிரான்சில் 6 வருடமாக 6000 கார்கள்: மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நபர் பொலிசில் சிக்கினான்

Report Print Santhan in பிரான்ஸ்
504Shares
504Shares
ibctamil.com

பிரான்சில் 6 வருடமாக 6000 கார்களுக்கு பஞ்சர் ஏற்படுத்திய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரான்சின் பாரிஸில் கடந்த 6 வருடமாக மர்ம நபர் ஒருவர் கார்களில் ஊசியால் குத்தி பஞ்சர் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆறு வருடங்களில் மட்டும் 6,000-க்கும் அதிகமான கார்களுக்கு பஞ்சர் செய்து இருக்கிறார் என்றும் இவர் மீது 1,100-க்கும் அதிகமான நபர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து பொலிசார் கடந்த 6 வருடமாக தேடி வந்த வேளையில், இவனை நேற்று பாரிசில் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், பாரிஸின் முக்கியமான ஒரு சாலையில் இவன் காருக்கு பஞ்சர் செய்து கொண்டு இருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

அதன் பின் அவன் பொலிசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், எனக்கு பஞ்சர் போடுவது ஆனந்தமாக இருக்கும், ஊசியால் குத்தும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்று கூறியுள்ளான்.

அதுமட்டுமின்றி பஞ்சர் வேலைக்கு அவன் நிறைய திட்டங்கள் வேறு தீட்டி இருக்கிறார். இதற்காக தனி நோட் வாங்கி எந்த தெருவில் எப்போது பஞ்சர் போடலாம், எப்படி சிசிடிவியில் மாட்டாமல் பஞ்சர் போடலாம் என்றெல்லாம் அவன் திட்டம் தீட்டியிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்