நடுவானில் விமானத்தில் கோளாறு: விமானிகள் எடுத்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்ட காரணத்தினால் எரிபொருளை கீழே ஊற்றிய விமானிகளின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Orly விமான நிலையத்தில் இருந்து நேற்று ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.

பிரான்ஸில் உள்ள Cayenne நகருக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கலுடன் விமானத்தை தரையிறக்க முடியாது என்பதால் விமானிகள் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

விமானத்தில் கோளாறு இருப்பதால் அதன் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் விமானம் பறந்த நிலையில் அதில் இருந்த எரிபொருளை கீழே ஊற்றியுள்ளனர்.

ஆனால், இவ்வாறு ஊற்றப்பட்ட எரிபொருள் பாரீஸ் நகருக்கு அருகில் உள்ள Fontainebleau என்ற வனப்பரப்பிற்கு மேல் விழுந்துள்ளது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து நகர மேயரான Frederick Valletoux என்பவர் வெளியிட்ட தகவலில், ‘பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறந்த சுற்றுலா தளங்களில் Fontainebleau என்ற வனப்பகுதியும் ஒன்று.

இப்பகுதிக்கு ஒரு வருடத்திற்கு சுமார் 10 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த வனப்பகுதிக்கு மேல் எரிபொருளை ஊற்றியது மிகவும் கண்டிக்கத்தக்கது’ என கருத்து தெரிவித்துள்ளார்.

எனினும், விமானிகளின் இந்த நடவடிக்கை விதிமுறைகளை மீறாமல் செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 6,000 அடிகள் உயரத்தில் பறந்த விமானம் எரிபொருளை கீழே ஊற்றியதால், அது தரையை தொடுவதற்குள் எரிபொருள் காற்றில் ஆவியாகி விடும்.

எனினும், இதுபோன்ற செயல் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பது உண்மை தான். ஆனால், பயணிகளின் நலனிற்காக இதுபோன்ற செயல்களில் விமானிகள் ஈடுப்படுவது வழக்கமான ஒன்று என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments