பெண் காவலரை கத்தியால் தாக்கிய நபர்: அதிரடியாக சுட்டுக் கொன்ற பொலிஸ்!

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் பெண் காவலர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதை தொடர்ந்து அவரை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Vincennes என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள மருத்துவமனைவில் சற்று முன்னர் செவிலியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதும் அங்கு அதிகாரிகள் வந்து சேர்ந்துள்ளனர்.

அப்போது பொலிசாரை பார்த்த அந்த மர்ம நபர் அங்கிருந்த பெண் காவலர் மீது கத்தியால் தாக்கியுள்ளார். இதில் பெண் காவலருக்கு தொண்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

நிலமையை உணர்ந்த பொலிசார் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த மர்ம நபரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்தியவருக்கு 29 வயது எனத் தெரியவந்துள்ளது.

எனினும், இச்சம்பவத்திற்கும் தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்புள்ளதா என தெரியவரவில்லை.

காயம் அடைந்த செவிலியர் மற்றும் பெண் காவலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments