விமானத்திலிருந்து குதித்த சிறுவன் தரையில் விழுந்து பலியான பரிதாபம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் விமானத்திலிருந்து குதித்த 17 வயது வீரர், நடுவானில் பாராசூட் திறக்காததால் தரையில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து Mimizan நகர மேயர் Christian Plantier வெளியிட்டுள்ள தகவலில், Pyrenees-Atlantiques நகரை சேர்ந்த 17 வயது சிறுவன், Mimizan விமானத்தளத்தில் கடந்த எட்டு நாட்களாகப் பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று அவர் விமானத்திலிருந்து குதித்தபோது, நடுவானில் பாராசூட்டோ அல்லது பாதுகாப்பிற்காக இருக்கும் இரண்டாவது பாராசூட்டோ திறக்கவில்லை.

இதனால் சிறுவன் நிலத்தில் மோதி உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சிறுவனின் உடலை Mimizan விமானத்தளத்திற்கு அருகிலிருக்கும் சிறிய காட்டிலிருந்து மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். சிறுவன் மறைவுக்கு மேயர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்த உடன் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாத்தா, பாட்டி சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து அறிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments