அகதிகளுக்கு வீடு வழங்க பொதுமக்களுக்கு பிரான்ஸ் அரசு கோரிக்கை

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளுக்கு தங்குமிடம் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டு அமைச்சரான இம்மானுவல் கோஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பிரான்ஸ் நாட்டில் அரசு ஏற்பாடு செய்துள்ள அகதிகள் முகாம்கள் நிரம்பி வழிகின்றன. இனிமேல், இந்த முகாம்களில் அகதிகளை தங்க வைப்பது இயலாத செயல்.

எனவே, அகதிகளுக்கு தங்குமிடங்கள் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்’ என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இவ்வாறு தங்குமிடம் வழங்கும் பொதுமக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதியும் அளிக்கப்படும்.

ஆண்டுக்கு 1,000 அகதிகளை எடுத்துக்கொள்ளும் தொண்டு நிறுவனத்திடம் ஒரு அகதிக்கு 1,500 யூரோ வீதம் அளிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒரு அகதியை எடுத்துக்கொள்ளும் ஒரு குடும்பம் அவருக்கு தனி அறை உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அகதிகளுக்கு வழங்கப்படும் தங்குமிடங்களில் 3,000 படுக்கை வசதிகளையும் ஏற்படுத்தி தரவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் அகதி அந்தஸ்த்து பெற்றுள்ள வெளிநாட்டுனர்களுக்காக மட்டுமே இந்த கோரிக்கையை அரசு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments