NEPL தொடரில் தீடீர் அசுர ஆட்டம் ஆடிய அம்பாறை அவெஞ்சர்ஸ்: செய்வதறியாது திக்குமுக்காடிய நொதேர்ன் எலைட்!

Report Print Samaran Samaran in கால்பந்து

IBC தமிழ் நிறுவனத்தால் நடாத்தப்படும் வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட பிரீமியர் லீக் போட்டியின் 10ஆம் சுற்று ஆட்டங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.

துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று முந்தினம் இரவு 9 மணிக்கு நடைபெற்ற 2ஆவது போட்டியில் நொதேர்ன் எலைட் அணியை எதிர்த்து தமிழ்வின்னின் அம்பாறை அவெஞ்சர்ஸ் அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் அணி 03:01 என்ற கோல் கணக்கில் நொதேர்ன் எலைட் அணியை வீழ்த்தி அம்பாறை அவெஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் அம்பாறை அவெஞ்சர்ஸ் அணி சார்பாக M.C கறூம் 02ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் எஸ். நபாஸ் 48,92 ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களையும் பதிவு செய்தனர்.

நொதேர்ன் எலைட் அணி சார்பாக சுமன்ராஜ் 88 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்தார்.

NEPL தொடரில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் தோல்வியையே பதிவு செய்து வந்த அம்பாறை அவெஞ்சர்ஸ் அணி தீடீரென யாழ்ப்பாணத்தின் பலம் மிக்க நொதேர்ன் எலைட் அணியை வீழ்த்தியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers