NEPL தொடரில் மட்டுநகரை பந்தாடிய தமிழ்யுனைடட் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

IBC தமிழ் நிறுவனத்தால் நடாத்தப்படும் வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட பிரீமியர் லீக் போட்டியின் 8ஆம் சுற்று ஆட்டங்கள் கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.

நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் மட்டுநகர் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து தமிழ்யுனைடட் அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் தமிழ் யுனைடட் அணி 04:00 என்ற கோல் கணக்கில் மட்டுநகர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் தமிழ்யுனைடட் அணி சார்பாக நிதர்சன் (48,80), விக்னேஸ் (63), அப்துல்லா (90) ஆகியோர் தமது அணிக்காக கோல்களை பதிவு செய்தனர்

இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் போட்டியில் விளையாடிய தமிழ் யுனைடட் அணி வெற்றியை பதிவு செய்தது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers