அசத்தல் ஆட்டம் ஆடிய மன்னார் FC: தொடர் தோல்வியால் தவிக்கும் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன்!

Report Print Samaran Samaran in கால்பந்து

IBC தமிழ் நிறுவனத்தால் நடாத்தப்படும் வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட பிரீமியர் லீக் போட்டியின் 8ஆம் சுற்று ஆட்டங்கள் கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.

நடைபெற்ற மூன்றாவது போட்டியில் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணியை எதிர்த்து மன்னார் FC அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் மன்னார் FC அணி 05:02 என்ற கோல் கணக்கில் ரிங்கோ ரைரன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் மன்னார் அணி சார்பாக டிலுக்சன் (7), சேக்விஸ் (30), லிமோன்ரன் (67) ஆவது நிமிடங்களிலும் மற்றும் டீன் 92, 94 ஆவது நிமிடங்களிலும் கோல்களை பதிவு செய்தனர்.

ரிங்கோ அணி சார்பாக அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வரித்து 22 ஆவது நிமிடத்திலும் ஜெயதீபன் 50 ஆவது நிமிடத்திலும் கோல்களை பதிவு செய்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ரிங்கோ அணி தற்போது தொடர் தோல்விகளால் தவிப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers