லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணியை பந்தாடிய ரில்கோ FC!

Report Print Samaran Samaran in கால்பந்து

தெற்காசியாவின் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து IBC தமிழின் பிரதான அநுசரணையில் நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் வியாழன் இரவு 9 மணிக்கு நடைபெற்ற போட்டியில் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணியை எதிர்த்து ரில்கோ FC அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் ரில்கோ FC அணி 06:02 என்ற கோல் கணக்கில் ரிங்கோ அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.

ரில்கோ அணி சார்பாக தனேஸ் நான்கு கோல்களையும், இவானா இரண்டு கோல்களையும் பதிவு செய்தனர்.

ரிங்கோ அணி சார்பாக இல்காம் மற்றும் அனுசாத் ஒவ்வொரு கோலை பதிவு செய்தனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers