அம்பாறை அவெஞ்சர்ஸ் அணியை இலகுவாய் வென்ற வல்வை FC அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து
அம்பாறை அவெஞ்சர்ஸ் அணியை இலகுவாய் வென்ற வல்வை FC அணி!

தெற்காசியாவின் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து IBC தமிழின் பிரதான அணுசரணையில் நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற போட்டியில் வல்வை FC அணியை எதிர்த்து தமிழ்வின்னின் அம்பாறை அவெஞ்சர்ஸ் அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் வல்வை அணி 04:01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வல்வை அணி சார்பாக 26, 27, 78 ஆவது நிமிடங்களில் ஞானரூபன் மூன்று கோல்களையும் துசிகரன் 84 ஆவது நிமிடத்தில் நான்காவது கோலையும் பதிவு செய்தார்.

அம்பாறை அணி சார்பாக மெரிகன் 47 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்

இந்த ஆட்டத்தில் வல்வை அணி அம்பாறை அணியை இலகுவாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers