ரில்கோ FC அணியை பந்தாடிய கிளியூர் கிங்ஸ் அணி: தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி!

Report Print Samaran Samaran in கால்பந்து

IBC தமிழ் நிறுவனத்தால் நடாத்தப்படும் வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட பிரீமியர் லீக் போட்டியின் இறுதிக்கட்ட ஆட்டங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.

நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து ரில்கோ FC அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் கிளியூர் கிங்ஸ் அணி 01:00 என்ற கோல் கணக்கில் ரில்கோ FC அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணி சார்பாக 53 ஆவது நிமிடத்தில் வெளிநாட்டு வீரரான ஜொப் மைக்கல் ஒரு கோலினை பெற்றுக்கொடுத்தார்.

கிளியூர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இந்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

மறுபுறத்தில் இத்தொடரில் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளிலும் எந்த தோல்வியையும் பெறாத பலம் மிக்க ரில்கோ FC அணி இந்த போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது.

ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.

வடக்கு கிழக்கில் உள்ள 8 மாட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகள் மோதும் இந்த கால்பந்தாட்ட தொடர் தான் தெற்காசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பரிசுத்தொகையை கொண்ட தொடராக காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆட்டநாயகனாக ஜொப் மைக்கல் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்