17 வய­துக்­குட்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் றேஞ்­சர்ஸ் அணி மகு­டம் சூடி­யது!

Report Print Samaran Samaran in கால்பந்து

பொலிகை பாரதி விளை­யாட்­டுக் கழ­கத்­தால் நடத்­தப்­பட்ட 17 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி கிண்­ணம் வென்­றது.

பாரதி விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­ முன்­தி­னம் இறு­தி­யாட்­டம் நடை­பெற்­றது.

சுஜாஸ் தலை­மை­யி­லான றேஞ்­சஸ் அணி­யினை எதிர்த்து திசாந் தலை­மை­யி­லான நவிண்­டில் கலை­மதி அணி மோதி­யது.

ஆரம்­பம் முதல் விறு­வி­றுப்­பாக இடம்­பெற்ற இறுதி ஆட்­டத்­தில் இரு அணி வீரர்­க­ளும் சிறப்­பான ஆட்­டத்­தினை வெளிப்­ப­டுத்­தி­னர்.

கோல்­கள் இல்­லா­மல் முடி­வ­டைந்­தது முத­லா­வது பாதி.

இரண்­டாம் பாதி ஆரம்­பித்த 10ஆவது நிமி­டத்­தில் றேஞ்­சர்­ஸின் சார்­பில் லக்­சி­கன் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார்.

அடுத்த சில நிமி­டங்­க­ளில் அதா­வது ஆட்­டத்­தின் 13ஆவது நிமி­டத்­தில் மற்­றொரு கோலை­யும் பதி­வு­செய்து 2:0 என்ற கோல் கணக்­கில் சம்­பி­ய­னா­னது றேஞ்­சர்ஸ்.

ஆட்ட நாய­க­னாக லக்­சி­கன் தெரிவு செய்­யப்­பட்­டார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers