கர­வெட்டி பிர­தேச கால்­பந்­தாட்­டத்­தில் சம்­பி­ய­னா­கி­யது அல்­வாய் மனோ­கரா இளை­ஞர் கழ­கம்!

Report Print Samaran Samaran in கால்பந்து

கர­வெட்டி பிர­தேச இளை­ஞர் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத்­தில் சம்­பி­ய­னா­கி­யது அல்­வாய் மனோ­கரா இளை­ஞர் கழ­கம்.

கர­ண­வாய் கொலின்ஸ் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் சம­ர­பாகு நியூட்­டன் இளை­ஞர் கழக அணி­யும் அல்­வாய் மனோ­கரா இளை­ஞர் கழக அணி­யும் பலப்­ப­ரீட்சை நடத்­தின.

கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யி­லும் அதே­நி­லை­தான். சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

முடி­வில் 4:2 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­கி­யது அல்­வாய் மனோ­கரா இளை­ஞர் கழக அணி.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers