ஜொப் மைக்கல் அபாரம்; IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் சிறப்பான வெற்றி: அதிர்ச்சி தோல்வியடைந்த முல்லை பீனிக்ஸ்!

Report Print Samaran Samaran in கால்பந்து
ஜொப் மைக்கல் அபாரம்; IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் சிறப்பான வெற்றி: அதிர்ச்சி தோல்வியடைந்த முல்லை பீனிக்ஸ்!

தெற்காசியாவின் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து IBC தமிழின் பிரதான அணுசரணையில் நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற போட்டியில் IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து வலம்புரி விடுதியின் முல்லை பீனிக்ஸ் அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த அணிகளாலும் கோல்களை பெறமுடியவில்லை.

இறுதி நிமிடத்தில் கிளியூர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஜொப் மைக்கல் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 83 ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக ஒரு கோலை பதிவுசெய்தார்.

கிண்ணம் வெல்லும் என எதிர்பாக்கப்படும் அணிகளில் ஒன்றான கிளியூர் கிங்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.

அன்மைய போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த முல்லை பீனிக்ஸ் அணி இந்த போட்டியில் தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்