NEPL தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன்ஸ் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

தெற்காசியாவின் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து IBC தமிழின் பிரதான அநுசரணையில் நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் வியாழன் மாலை 6 மணிக்கு நடைபெற்ற போட்டியில் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணியை எதிர்த்து மாதோட்டம் FC அணி மோதியது.

இதில் ரிங்கோ ரைரன்ஸ் அணியும், மாதோட்டம் அணியும் 04:04 என்ற கோல்களை பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.

இந்த போட்டியில் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி சார்பாக A.M வரித்து 16,64 ஆம் நிமிடங்களிலும், S.M ருசான் 50 ஆவது நிமிடத்திலும் மற்றும் சன்பிரகாஸ் 69 ஆவது நிமிடத்திலும் கோல்களை பதிவு செய்தனர்.

மாதோட்டம் FC அணி சார்பாக ஜேசுதாசன் 30 ஆவது நிமிடத்தில் முதல் கோலையும், சிவன்ராஜ் 31 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் நிரஞ்சன் திலீபன் ஆகியோர் முறையே 48,93 ஆவது நிமிடங்களிலும் கோல்களை பதிவு செய்தனர்.

ஆரம்பத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிங்கோ ரைரன் அணி தற்போது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers