மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த மன்னார் FC அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

தெற்காசியாவின் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து IBC தமிழின் பிரதான அணுசரணையில் நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ராஜா கிறீம் கவுஸின் மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து மன்னார் FC அணி மோதியது.

இதில் மன்னார் FC அணி, 02:01 என்ற கோல் கணக்கில் மட்டுநகர் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மன்னார் FC அணி சார்பாக இசைடீன் 8,35 ஆவது நிமிடங்களில் கோல்களை பதிவு செய்தார்.

மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக சஞ்சய் 27 ஆவது நிமிடத்தில் கோலை பதிவு செய்தார்.

ஆனாலும் மன்னார் FC அணியின் சிறப்பான தடுப்பாட்டம் காரணமாக மேலும் கோல்களை மட்டுநகர் அணியால் அடிக்க முடியவில்லை.

ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த போட்டியில் மன்னார் அணி வெற்றி பெற்றது.

தொடர் தோல்விகளை பெற்று வரும் மட்டுநகர் அணி இனிவரும் ஆட்டங்களில் வெற்றிபெறாத பட்சத்தில் தொடரில் இருந்து வெளியேறும் நிலை வரலாம்.

இரண்டாவது ஆட்டம்

அன்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பலம் பொருந்திய தமிழ் யுனைடட் அணியை எதிர்த்து தொடர் வெற்றிகளை பெற்று வரும் வல்வை FC அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் எந்த அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் முடிவுற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்