எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி: தொடர் தோல்வியில் பரிதவிக்கும் மட்டுநகர் சூப்பர் கிங்ஸ்!

Report Print Samaran Samaran in கால்பந்து

தெற்காசியாவின் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து IBC தமிழின் பிரதான அணுசரணையில் நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று முந்தினம் இரவு 9 மணிக்கு நடைபெற்ற போட்டியில் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணியை எதிர்த்து ராஜா கிறீம் கவுஸின் மட்டுநகர் சுப்பர்கிங்ஸ் அணி மோதியது.

இதில் ரிங்கோ ரைரன் அணி அணி, 03:02 என்ற கோல் கணக்கில் மட்டுநகர் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ரிங்கோ ரைரன் அணி சார்பாக A.M வரித்து 21 ஆவது நிமிடத்திலும், S.M ரொசான் 59,68 ஆவது நிமிடங்களிலும் கோல்களை பதிவு செய்தனர்.

அதே போல் இறுதிவரை போராடிய மட்டுநகர் அணி சார்பாக சஞ்சை 37 ஆவது நிமிடத்திலும் அபினேஸ் 83 ஆவது நிமிடத்திலும் கோல்களை பதிவு செய்தனர்.

இறுதிவரை மட்டுநகர் அணி கோல் அடிக்க போராடினாலும் எதிர்பார்க்காத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கோ ரைரன் அணி 01 கோல் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முன்னிலைக்கு முன்னேறியது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers