நெய்மருடன் நெருங்கி இருந்த வீடியோவை வெளியிட்டார் பாதிக்கப்பட்ட இளம்பெண்

Report Print Basu in கால்பந்து

பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர், தன்னை பாரிஸ் ஓட்டலில் வைத்து வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டிய இளம்பெண், தற்போது 1 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நெய்மர் தற்போது பாரிஸின் கிளப் அணியான பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், பிரேசிலை சோர்ந்த 26 வயதான Najila Trindade என்ற பெண், சமூக வலைதள மூலம் பழகிய நெய்மர், தன்னை பாரிஸில் உள்ள ஓட்டலில் வைத்து வன்புணர்வு செய்து, தாக்கியதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும், நெய்மர் மீது புகாரும் அளித்துள்ளார்.

இதனையடுத்து, தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுத்த நெய்மர், அவை உண்மையில்லை என பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நெய்மருடன் ஓட்டல் அறையில் இருக்கும் 1 நிமிட விடியோவை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், நெய்மருடன் நெருங்கி இருக்கும் Najila Trindade, திடீரென அவரை தாக்குகிறார். இந்த வீடியோ சம்பவத்திற்கு மறுநாள் ஆதாரத்திற்காக எடுக்கப்பட்டதாக Najila Trindade-வின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ மொத்தம் 7 நிமிடங்கள் கொண்டது, இன்னும் நானே முழு வீடியோ பார்க்கவில்லை என Najila Trindade-வின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய நெய்மரின் தந்தை, நான் என் மகனை பாதுகாக்க கூறவில்லை, வீடியோ வெளியிட்டதின் மூலம் அதில் நெய்மர் தான் தாக்கப்படுகிறார். இதன் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்