73 வயதில் கால்பந்து கோல் கீப்பர்! உலக சாதனை படைத்த இரும்பு மனிதர்

Report Print Kabilan in கால்பந்து

இஸ்ரேல் தொழில்பூர்வ கால்பந்து கிளப் போட்டி ஒன்றில், 73 வயது முதியவர் கோல் கீப்பராக விளையாடி உலக சாதனை படைத்துள்ளார்.

இஸ்ரேலைச் சேர்ந்த ஐசக் ஹயீக்(73) என்ற நபர், கடந்த வெள்ளிக்கிழமையன்று உலக சாதனை ஒன்றைப் படைத்தார். அதாவது 73வது வயதில் தொழில்பூர்வ கால்பந்து போட்டி ஒன்றில் அவர் விளையாடினார்.

கிளப் போட்டி ஒன்றில் இரோனி ஒர் யெஹுதா சாக்கர் அணிக்காக விளையாடினார் ஐசக். கோல் கீப்பராக செயல்பட்ட அவர், சில கோல்களை தடுத்தார். எனினும், இவரது அணி 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இராக்கில் பிறந்த இவர், தனது 4வது வயதிலேயே தனது பெற்றோருடன் இஸ்ரேல் வந்துவிட்டார். அடுத்த வாரம் தனது 74வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் தான், ஐசக் ஹயீக் கால்பந்து விளையாடினார்.

கின்னஸ் உலக சாதனை பிரதிநிதிகள் இவர் விளையாடுவதை அடையாளம் கண்டு, இவரது சாதனையை கின்னஸில் சேர்த்தனர். இதன்மூலம் உலகிலேயே 73 வயதில் தொழில்பூர்வ கால்பந்து போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை ஐசக் படைத்துள்ளார்.

இவருக்கு முன்பு உருகுவேயின் ராபர்ட் கர்மோனா என்ற வீரர் 53 வயதில் தொழில்பூர்வ கால்பந்து போட்டியில் விளையாடியதே சாதனையாக இருந்தது.

இந்நிலையில் இந்த சாதனை குறித்து ஐசக் கூறுகையில், ‘இன்னொரு போட்டியிலும் ஆடுவேன். இது எனக்கு மட்டும் பெருமை அல்ல, இஸ்ரேல் விளையாட்டு துறைக்கே பெருமை’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்