ரொனால்டோவின் ஆட்டத்தைப் பார்த்து கண்கலங்கிய காதலி! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in கால்பந்து
156Shares

ரொனால்டோவின் ஆட்டத்தைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த அவரது காதலி ஜார்ஜியானா, கண் கலங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உலகப் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ ஜூவெண்டஸ் அணியில் விளையாடி வருகிறார். இத்தாலியின் டுரின் நகரில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில், ஜூவெண்டஸ்-அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். இதன்மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் ஜூவெண்டஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஜூவெண்டஸ் அணி கால் இறுதிக்குள் நுழைந்தது. ரொனால்டோவின் ஆட்டத்தை அவரது காதலி ஜார்ஜியானா ராட்ரீகஸ் நேரில் கண்டு ரசித்தார். ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்ததைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த ஜார்ஜியானா கண்கலங்கி அழத்தொடங்கினார்.

அவர் நெகிழ்ச்சியில் கண்கலங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்